குற்றம்

15 மாதங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் மாட்டிக்கொண்ட நகைத் திருடன்..!

15 மாதங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் மாட்டிக்கொண்ட நகைத் திருடன்..!

Sinekadhara

ஹைதராபாத்தில் திருடிய நகையை அணிந்து போட்டோ எடுத்து, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்ததால் மாட்டிக்கொண்ட திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் ரச்சகொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாய்புரி காலனியில் உள்ள அங்கிடி ரவிகிரண், 2019ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு கோவிலுக்குச் சென்றிருக்கிறார். திரும்பிவந்து பார்த்தபோது வீடு திறந்த நிலையில் இருந்திருக்கிறது. அவர் வீட்டை பூட்ட மறந்துவிட்டதாக நினைத்திருக்கிறார். பிறகு, வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போய்விட்டதைக் கண்டுபிடித்த அவர், நகைகள் திருட்டுப்போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

அதன்பிறகு, சமீபத்தில் ரவிகிரணின் பக்கத்து வீட்டு பெண்மணி வாட்ஸ் அப்பில் தனது போட்டோ ஒன்றை ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். அந்தப் பெண், தன் வீட்டில் திருட்டுப்போன நகையைப் போன்றே ஒரு நகையை அணிந்திருப்பதை கவனித்த அவர், இதுகுறித்து போலீஸாரிடம் கூறியிருக்கிறார். அந்த பெண்ணிடம் பலகோணங்களில் விசாரணை நடத்தியபிறகு, அவர் மகன் பொன்னுகோட்டி ஜிஜேந்தர் நகையைத் திருடியது தெரியவந்திருக்கிறது.

அவரைக் கைதுசெய்த போலீஸார், அதற்கு உதவியாக இருந்த அந்த பெண்மணிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.