கடந்த 2019ஆம் ஆண்டில் 11.5 கோடி ரூபாய் மதிப்பிலான 200 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வங்கி விதிமுறைகளை பின்பற்றாமல் 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 200 ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. விதிமுறை மீறலுக்கு துணை போனதாக வங்கி அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கனரா வங்கியின் அப்போதைய மூத்த மேலாளர் தயாநிதி மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆவணங்களில் முறைகேடு செய்து வங்கியின் பண பெட்டகத்தில் இருந்து நேரடியாக பணத்தை மாற்றியது, ரிசர்வ் வங்கி விதிகளை மீறியது மட்டுமின்றி வங்கி பாதுகாப்பு மீறிய செயல் எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது.