குற்றம்

வாடகைத்தாயாக இருப்பேன் என மோசடி செய்ததாக பெண் காவலர் மீது புகார்

வாடகைத்தாயாக இருப்பேன் என மோசடி செய்ததாக பெண் காவலர் மீது புகார்

webteam

காஞ்சிபுரத்தில், வாடகைத் தாயாக இருப்பதாகக் கூறி மோசடி செய்ததாக பெண் காவலர் மீது, வயதான தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம், பங்காரம்மன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயது ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜெயக்குமார். இவரது மனைவி மல்லிகாவுக்கு வயது 58. இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில், அண்ணன் மகனை எடுத்து வளர்த்து வந்தனர். 2004ஆம் ஆண்டு ஒரு விபத்தில் அவர் உயிரிழக்க, ஜெயக்குமார், மல்லிகா தனித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அந்த தம்பதியை நாடிய தூரத்து உறவினரான வெள்ளை மதி என்ற பெண்காவலரின் குடும்பத்தினர், தங்கள் மகள் வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுத்தருவார் என கூறியுள்ளனர். இதனை நம்பி ரூ.35 லட்சம் பணம் மற்றும் 42 சவரன் நகையை கொடுத்ததாகவும் ஆனால் அந்தப் பெண் காவலர் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் ஜெயக்குமார் மல்லிகா தம்பதியினர் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.