குற்றம்

கோயம்பேடு: மதுபோதையில் 100 அடி டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்

கோயம்பேடு: மதுபோதையில் 100 அடி டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்

webteam

கோயம்பேட்டில் 100 அடி டவர் மீது ஏறி மதுபோதையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனரால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா அருகே 100 அடி உயர துனண மின் நிலையம் இடிதாங்கி டவர் மீது ஏறி அமர்ந்து இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்துவதாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், டவர் மீது ஏறி நின்ற இளைஞரோடு பேச்சுவார்த்தை நடத்தினர். தனது ஆட்டோவை அவரது நண்பன் எடுத்துச்சென்றதாகவும் அதனை மீட்டு தரவேண்டும் என்றும் டவர் மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கோயம்பேடு தீயணைப்புதுறை அதிகாரிகளும், போலீசாரும் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட நபர் ஆட்டோ ஓட்டுரான ஜான்பால் (27) என்பதும், அவரது நண்பரோடு மது அருந்திய நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அவர் ஆட்டோவை தூக்கி சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மதுபோதையில் இருந்த ஜெயபால் ஆட்டோவை மீட்டு தருமாறு போராட்டத்தில் ஈடுப்பட்டதும் தெரியவந்துள்ளது.