குற்றம்

பல சிறுமிகளைக் கொன்று கால்வாயில் வீசிய வழக்கு: 2 பேருக்கு தூக்கு

webteam

டெல்லி அருகே நிதாரியில் சிறுமிகளை கொன்று கால்வாயில் வீசிய வழக்கில் இரு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நிதாரியில், கடந்த 2006ஆம் ஆண்டு, தொழிலதிபர் மொனிந்தர் சிங் பாந்தேர் வீ்ட்டில் வேலைபார்த்து வந்த சுரேந்தர் கோலி என்பவர் பல சிறுமிகளை கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்று கால்வாயில் வீசியது அம்பலமானது. இதனையடுத்து சுரேந்தர் கோலி மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 7 வழக்குகளில் சுரேந்தர் கோலிக்கு ஏற்கனவே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் தொழிலதிபர் மொனிந்தர் பாந்தேருக்கும் தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மொனிந்தர் சிங் பாந்தேருக்கும் காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.