குற்றம்

பெண்ணை கொலை செய்து நகைகளை திருடிய வழக்கு: அடகு கடையில் கேரள போலீசார் விசாரணை

பெண்ணை கொலை செய்து நகைகளை திருடிய வழக்கு: அடகு கடையில் கேரள போலீசார் விசாரணை

kaleelrahman

கேரளாவில் பெண்ணை கொலை செய்து நகையை திருடிய நபரை அஞ்சுகிராமம் நகை அடகு கடைக்கு அழைத்து வந்து கேரள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அம்பலமுக்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு செடி கடையில் வேலை பார்த்து வந்தவர் வினிதா (38). இவர் கடந்த ஞாற்றுக்கிழமை கடையில் இருந்தபோது கத்தியால் குத்தி படுகொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில் அம்பலமுக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து செடி கடை அருகில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நடத்திய விசாரணையில் இந்த கொலையை செய்ததாக குமரி மாவட்டம் தோவாளை வெள்ளமும் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற ராஜேஷ் (49) என்பவரை கேரள காவல் துறையினர் நேற்று காவல் கிணறு பகுதியில் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து கைது செய்த ராஜேஷிடம் நடத்திய விசாரணையில் செடி கடையில் பெண் தனிமையில் இருப்பதை அறிந்து செடி தொட்டி வாங்குவதுபோல் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் அவரது கையில் வைத்திருந்த கத்தியால் குத்தி படுகொலை செய்து நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாகவும், நகையை அஞ்சுகிராமம் பேருந்து நிலையம் முன்புள்ள நகை அடகு வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அவரை அஞ்சுக்கிராமம் நகை அடகு கடைக்கு அழைத்து வந்த கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.