கேரளாவைச் சேர்ந்தவர் பிஜோ பிலிப் (39). இவர் கேரளாவின் ரன்னி பகுதியில் பொது சேவை மையம் நடத்திக் கொண்டிருந்த அனிஷா என்பவரை ஓரிரு வருடங்களுக்கு முன்பு சந்தித்துள்ளார். இருவரும் பேசி நண்பர்களாகி உள்ளனர்.
அனிஷாவிட பேச்சுக்கொடுத்த பிஜோ, அவருக்கு படிப்பில் ஆர்வம் இருப்பதையும் பொருளாதார தேவை இருப்பதையும் அறிந்திருக்கிறார். இதனால் “நீங்கள் ஏன் இங்கிருந்து கஷ்டப்பட வேண்டும்? அமெரிக்காவிற்கு சென்று படிப்பதுடன், அங்கேயே வேலை செய்து வந்தால் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்” என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய அனிஷா அமெரிக்கா சென்று படிக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய தயாராக இருந்ததை தெரிந்துக்கொண்ட பிஜோ பிலிப், அனிஷாவிடம், “நான் அமெரிக்காவில் ஏனென்சி நடத்தி வருகிறேன். எனது உறவினர்கள் அங்குதான் வசித்து வருகிறார்கள். உங்களுக்கு கண்டிப்பாக அமெரிக்காவில் நல்ல யுனிவர்ஸிட்டியில் படிப்பும், நல்ல வேலையும் வாங்கி தந்துவிடுவேன். அது எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை. ஆனால் அதற்கான ப்ரொசிஜருக்கு சில லட்சம் செலவாகும்” என்று கூறியிருக்கிறார்.
இதை உண்மை என்று நம்பிய அனிஷா, 2022-ல் இருந்து அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் தன்னிடமிருந்த தங்க நகைகளையும் அடமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தையும் கொடுத்துள்ளார்.
ஆனால் பிஜோவிடம் இருந்து அனிஷாவுக்கு வேலைக்கான ஆர்டரோ அல்லது படிப்பிற்கான ஏற்பாடோ வராமல் இருந்துள்ளது. இதுகுறித்து அனிஷா பிஜோவிடம் கேட்ட போதெல்லாம், அமெரிக்காவில் தனக்கு தெரிந்தவர்களை வைத்து அனிஷாவிடம் அடிக்கடி பேச வைத்திருக்கிறார் பிஜோ. இதனால் நம்பிக்கையடைந்த அனிஷா மீண்டும் மீண்டும் அவர் கேட்க கேட்க பணத்தையும் நகையையும் கொடுத்து இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றபடுவதாக உணர்ந்த அனிஷா மீண்டும் பிஜோ பிலிப்பிடம் வேலையைக் குறித்து கேட்டுள்ளார். அதுகுறித்து அவரிடமிருந்து சரியான பதில் வராமல் போகவே, அனிஷா போலீசாரிடம் சென்று புகார் அளித்துள்ளார்.
அனிஷாவின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், பெங்களூர் தப்பிச்செல்லவிருந்த பிஜோ பிலிப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில்
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
அதாவது ‘ஒருவன் பொய் என்று தெரிந்தும் அதை சொல்லி அடுத்தவர்களை ஏமாற்றினால், அவனது மனசாட்சியே அவனை காயப்படுத்திவிடும்’ என்பது வள்ளுவர் சொல்லிய செய்யுள்.
ஆனால்... ‘அது அந்த காலம், இது இந்த காலம்’ என்று வடிவேலு சொல்லுவது போல... ஏமாற்றுபவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்றே இப்போதெல்லாம் இல்லை!