குற்றம்

கேரளா: கல்லூரி மாணவியை கொலை செய்த மாணவன்- காதல் பிரச்னை எனத் தகவல்

கேரளா: கல்லூரி மாணவியை கொலை செய்த மாணவன்- காதல் பிரச்னை எனத் தகவல்

kaleelrahman

கேரளாவில் காதல் பிரச்னையால் கல்லூரி மாணவியை சக மாணவன் கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு புட் டெக்னாலஜி பிரிவில் படித்துவந்த வைக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவி நிதினா மோள் (22). இவரது வகுப்பில் படிக்கும் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த மாணவர் அபிஷேக் (20). இன்று கல்லூரியில் நடந்த தேர்வை எழுத வந்த இருவரும் தேர்வை எழுதிவிட்டு தேர்வு அறையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

இதையடுத்து வெளியே வந்த இருவரும் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானம் அருகில் உள்ள நடைபாதை வழியே சென்று கொண்டிருந்தனர். அப்போது அபிஷேக் தன்னுடன் நடந்து வந்த நிதினா மோளை திடீரென கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இந்த நிலையில் கல்லூரியில் நின்ற மாணவர்கள் ஓடிவந்து நிதினா மோளை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், அபிஷேக்கை பிடித்த மாணவர்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அபிஷேக்கிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இருவரும் காதலித்து வந்ததாகவும் இந்த காதலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.