தகராறு செய்த இளைஞர் pt desk
குற்றம்

கர்நாடகா: காரை முந்தி சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கிய 4 இளைஞர்கள் கைது!

கர்நாடகாவில் காரை முந்தி சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக காரில் சென்ற 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் துமகூரை சேர்ந்த தம்பதியின் ஐந்து மாத ஆண் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு துமகூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக பெங்களூருவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தகராறு செய்த இளைஞர்

இதையடுத்து நேற்று மாலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம், பெங்களூருக்கு பெற்றோர் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். அந்த ஆம்புலன்ஸை ஓட்டுனர் ஜான் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது பெங்களூர் அருகே நெலமங்களா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை அவர் முந்திச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்தவர்கள், ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து வந்தனர்.

நெலமங்களா சுங்கச்சாவடி அருகே ஆம்புன்ஸ் மெதுவாக வந்தபோது, காரில் இருந்த நான்கு இளைஞர்கள் ஆம்புலன்ஸை வழிமறித்தனர். இதையடுத்து ஐந்து மாத குழந்தை உயிருக்கு போராடி வருவதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்றும் ஓட்டுனர் மன்றாடியுள்ளார். ஆனால், மதுபோதையில் இருந்த இளைஞர்கள், ஓட்டுனர் ஜானை சரமாரியாக தாக்கினர்.

Youth

இதை பார்த்த அங்கிருந்த போலீசார், இளைஞர்களை தடுத்து நிறுத்தி, ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஓட்டுனரை தாக்கியதாக நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.