அரசுப் பள்ளி ஆசிரியர் மனைவியுடன் கைது  pt desk
குற்றம்

கள்ளக்குறிச்சி | தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி - அரசுப் பள்ளி ஆசிரியர் மனைவியுடன் கைது!

உளுந்தூர்பேட்டை அருகே தீபாவளி சீட்டு நடத்தி 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த அரசுப் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ஆறுமுகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன். இவர், நெடுமானூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயா, எலவனாசூர்கோட்டை கடை வீதியில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

Online trade

இந்நிலையில், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தீபாவளி சீட்டு நடத்தி உள்ளனர் அதன் மூலம் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூபாய் 50 லட்சம் வசூல் செய்துள்ளனர். ஆனால், பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறி 100க்கும் மேற்பட்டோர் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தனர். இந்த புகார் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் வீரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இதையடுத்து நேற்று சனிக்கிழமை அரசுப் பள்ளி ஆசிரியர் முரளிதரன் மற்றும் அவரது மனைவி ஜெயா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆசிரியர் முரளிதரன் மற்றும் அவரது மனைவி ஜெயா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பொதுமக்களிடம் வசூல் செய்த 50 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்து ஏமாந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Arrested

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்து உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.