குற்றம்

மங்களூரு குக்கர் வெடிப்பு சம்பவம் - பிரபலம் அல்லாத பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு?

மங்களூரு குக்கர் வெடிப்பு சம்பவம் - பிரபலம் அல்லாத பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு?

webteam

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் (ஐஆர்சி) என்ற பொறுப்பேற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடகா மாநிலம் மங்களூரில் நவம்பர் 19ம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் பயணித்த இளைஞர் படுகாயம் அடைந்தனர்.

இதை அடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், காயம் அடைந்த ஆட்டோவில் பயணித்த ஷரிக் பயங்கர சதி திட்டத்துடன் குக்கர் வெடிகுண்டை தயாரித்ததும் இதனை , திட்டமிட்டபடி குறிப்பிட்ட இடத்தில் சென்று வெடிக்க வைப்பதற்காக செல்லும் வழியில் தவறுதலாக வெடிகுண்டு வெடித்ததாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாத இயக்கத்துடன் ஷரீக் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மங்களூரு குண்டு வெடிப்புக்கு "இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் அமைப்பு" பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஹிந்து கோவிலை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஷாரிக் பயன்படுத்திய வாட்ஸ்அப் எண்ணில் கோவையில் உள்ள ஆதி யோகி சிலையை  டிஸ்ப்ளே புகைப்படமாக  வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

பிரேம் ராஜ் என்ற பெயரில் செல்போனை பயன்படுத்தி வந்த ஷாரிக், கௌரி அருண்குமார் என்ற பெயரில் கோவையில் உள்ள விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், ஷாரிக் பயன்படுத்திய வாட்ஸப் எண்ணில் கோவையின் முக்கிய சுற்றுலா தலங்களில்  ஒன்றான ஈஷாவின் ஆதியோகி சிலையை டிஸ்ப்ளே புகைப்படமாக  வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் அவர் ஈஷா சென்று வந்தாரா? அவருடன் வேறு யாரும் அங்கு சென்று வந்தனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

அத்துடன் டிரைவர் ஒருவர் ஈஷா யோகா மையத்தில் ஷாரிக்கை நேரில் பார்த்ததாக கூறி வருகிறார். ஆனால், அவர் சொல்வதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது இதுவரை உறுதியாகவில்லை. அவர் மதுபோதையில் அதிக நேரம் இருப்பதால் அவரது கருத்தினை எடுத்துக் கொள்வதாக வேண்டாமா என காவல்துறை தரப்பில் ஆலோசனை செய்து வருகிறார்கள்.