குற்றம்

மிரட்டி சொத்தை எழுதிவாங்கியதாக புகார்: போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு

மிரட்டி சொத்தை எழுதிவாங்கியதாக புகார்: போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு

Veeramani

தொழிலதிபரை கட்டிவைத்து சொத்துக்களை எழுதி வாங்கிய புகாரில் திருமங்கலம் காவல்துறை அதிகாரிகள் 6 பேர் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை, அவரின் பண்ணை வீட்டில் கட்டிவைத்து சொத்துகளை எழுதி வாங்கிய புகாரில், திருமங்கலம் காவல்நிலையத்தை சேர்ந்த 6 போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இதில் திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், எஸ்.ஐ பாண்டியராஜன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

2019 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்ததாக தொழிலதிபர் ராஜேஷ் புகார் அளித்திருந்தார். ஆனால், 2020 ஆம் ஆண்டுதான் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதன்பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். கடந்த ஆறு மாதங்களாக தீவிரமாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் தற்போது இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.