குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரைகள் வடிவில் போதை பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது, மதமாற்றம் செய்ததற்கான ஆதாரம் உள்ளது, பாலியல் துன்புறுத்தல் நடைபெற்று உள்ளது, குழந்தைகளும் பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கை கால்கள் உடைக்கப்பட்டுள்ளது என அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை தேசிய குழந்தைகள் நல ஆணையர் விழுப்புரத்தில் பேட்டி.
தேசிய குழந்தைகள் நல ஆணையர் டாக்டர் R.G. ஆனந்த் அவர்கள் உத்தரவின் பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய குழந்தைகள் நல ஆணையர் டாக்டர் ஆனந்த் தேசிய குழந்தைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டதாகவும். இந்த குண்டுல புலியூர் ஆசிரமம் விவாதத்தில் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் இந்த குண்டலபுலியூர் ஆசிரமம் 60 நபர்கள் தங்குவதற்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது,
ஆனால்,இதற்கு மாறாக 140-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த ஆசிரமத்தில் அனுமதி இன்றி தங்க வைத்து , மனநலம் பாதிக்கப்பட்டவர்களளையும் அடைத்து வைக்கப்பட்டுதுடன், அவர்களுக்கு செயற்கையான முறையில் போதை மருந்து அளிக்கப்பட்டுள்ளது, 25 ஆயிரத்திற்கும் அதிகமான மாத்திரைகள் வெவ்வேறு விதமாக போதைப் பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெவ்வேறு மாநிலத்திலிருந்து மாத்திரைகள் கொண்டுவரப்பட்டு போதைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், சாலைகளில் சுற்றி திரிந்தவர்களை இங்கு கொண்டு வந்து அடைத்து அடித்து உதைத்து அவர்களது கை கால்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் இங்கு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்கு மதம் மாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் மத மாற்றம் செய்ததற்கான ஆதாரங்களும் தங்களுக்கு கிடைத்துள்ளது எனவும், போதை மாத்திரைகளை கொடுத்து இங்குள்ள பிரம்மாண்டமான இயேசு சிலையினை காண்பித்து மதமாற்றம் செய்யப்படுவதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் இந்த ஆதாரங்கள் உள்ள நிர்வாகி அறை மற்றும் வேலையாட்கள் தங்கி உள்ள அறைகள் ஆகிய இரண்டு அறைகள் உடனடியாக சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இதே போன்ற ஆசிரமம் பெங்களூரில் உள்ளதாகவும் அந்த ஆசிரமத்திற்கு சென்று விசாரணை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தவர் போதை மாத்திரைகள் எங்கிருந்து வருகின்றன இந்திய அளவில் இவர்களுக்கு எங்கெங்கு தொடர்பு உள்ளது என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை தொடங்க உள்ளதாகவும் தேசிய குழந்தைகள் நல ஆணையர் டாக்டர் ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.