நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மேலும் ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குளித்தலை ரயில் நிலையம் அருகே பல ஆண்டுகளாக இயங்கி வந்த நர்சிங் கல்லூரியில் பயின்ற மாணவிக்கு கல்லூரி முதல்வரும் வழக்கறிஞருமான செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், செந்தில்குமார் உட்பட உடந்தையாக இருந்த வார்டன் அமுதவல்லி, மகாலட்சுமி ஆகியோர்கள் மீது போக்ஷோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு வருடத்திற்கு தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையம் அருகே தனியார் நர்சிங் கல்லூரி கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி மூன்றாண்டு நர்சிங் படிப்பில் சேர்ந்து விடுதியில் தங்கி முதலாமாணடு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவியை கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி தாளாளரும் வழக்கறிஞருமான செந்தில்குமார் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதில் மாணவி மறுத்தபோது சம்மதிக்கவில்லை என்றால் படிப்பு சான்றிதழை தர மாட்டேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த பாலியல் தொல்லைக்கு விடுதி வார்டன் அமுதவள்ளி மற்றும் சமையலர் மகாலட்சுமி ஆகிய இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளதாக நிலையில், பெற்றோர் உதவியுடன் மாணவி கரூர் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டதில் மூன்று நபர்களும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் பரிந்துரையின் பெயரில் கரூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் உத்தரவின் பெயரில் நர்சிங் கல்லூரி தாளாளரும் வழக்கறிஞர் ஆன செந்தில்குமார் மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த நர்சிங் கல்லூரி காப்பாளர் அமுதவல்லி ஆகியோருக்கு (குண்டாஸ்) தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மீண்டும் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கல்லூரியை சார்ந்த அனைவரும் சம்பந்தபட்டுள்ளதால் இச்சம்பவம் குளித்தலை பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.