ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக மணல் கடத்தி வரப்படுவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலமாகியிருக்கிறது.
ஆந்திராவின் சூளுர்பேட்டையில் இருந்து மணல் ஏற்றிவரும் லாரிகளை அதிகாலை நேரத்தில் சென்னையில் அதிகம் காண முடிகிறது. திருப்பதி, நெல்லூர், நகரி, சூளுர்பேட்டை போன்ற இடங்களில் குவாரிகளில் இருந்து அதிகாலை நேரத்தில் சென்னைக்கு லாரிகள் மூலம் மணல் கொண்டுவரப்படுகிறது. ஆந்திர மாநிலத்திற்குள் உள்ள ஒரு ஊருக்கு மணல் கொண்டு செல்வதாக ரசீது பெற்று தமிழகத்திற்குள் கொண்டு வந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியில் விற்பனை செய்வது நம் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆந்திரா மாநிலத்தின் கனிம வளங்கள் அந்த மாநிலத்திற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அரசாணை இருக்கிறது. இது 2016 ம் ஆண்டில் இருந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தாலும், தமிழகத்திற்கு சட்ட விரோதமாக லாரிகள் மூலம் இப்போதும் மணல் கடத்தப்படுகிறது. மணல் வாங்க வந்தது போல நாம் நேரில் சென்று அந்த நபர்களிடம் பேச்சு கொடுத்தபோது, ஆந்திர மணலை சட்டவிரோதமான கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவது உறுதியானது.
ஆந்திராவில் இருந்து ஒரே வழியை பயன்படுத்தாமல் சித்தூர் வழியாக காஞ்சிபுரம் சென்னைக்கும், வேலூர் வழியாக சோளிங்கர், சென்னைக்கும் மணல் கொண்டுவரப்படுகிறது.
ஆந்திராவில் மணல் கடத்தல் செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை இருப்பது போல் தமிழகத்திலும் கடுமையாக்க வேண்டும் என்கின்றனர் செயற்பாட்டாளர்கள். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கனிமவளத் துறை அதிகாரிகளை கேட்டபோது காவல்துறை உடன் இணைந்து கண்காணித்து வருவதாகவும் கடந்த வாரத்தில் மட்டும் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட 3 லாரிகள் பிடித்து வழக்குப்பதிவு செய்து இருப்பதாக தெரிவித்தனர்.
கள ஆய்வில் நமக்கு தெரியவந்தவற்றின் விவரங்கள்: