Husband arrested pt desk
குற்றம்

நீலகிரி: குடும்பத் தகராறில் கணவரால் மனைவிக்கு நேர்ந்த துயரம் - போலீசார் விசாரணை

உதகை அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

webteam

செய்தியாளர்: ஜான்சன்

உதகை எல்ஹில் பகுதியைச் சேர்ந்தவர்கள் மோகன் (46) ஷோபா (38) தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் எல்ஹில் பகுதியில் உள்ள மோகனுக்கு சொந்தமான வீட்டில் ஷோபா தனது குழந்தைகள் மற்றும் கணவரின் சகோதரி, தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

Wife

மோகன் மட்டும் முத்தோரை பகுதியில் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து கணவன், மனைவி இடையே சமாதானம் ஏற்பட்டு கடந்த ஒரு மாத காலமாக மோகன் தனது குடும்பத்தினருடன் எல்ஹில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து எல்ஹில் வீட்டில் வசித்து வந்த மோகனின் சகோதரியை, அவர் திருமணமான வீட்டுக்கு சென்று வாழுமாறும், இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்றும் ஷோபா கூறியதாக தெரிகிறது.

இதனால் தம்பதியர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மோகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஷோபாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ஷோபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மோகன், உதகை நகர மத்திய போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

Arrested

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஷோபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.