குற்றம்

மொபைல் ஆப் மூலம் ஓரினச் சேர்க்கை: மிரட்டி பணம் பறித்த இரு கல்லூரி மாணவர்கள் கைது

மொபைல் ஆப் மூலம் ஓரினச் சேர்க்கை: மிரட்டி பணம் பறித்த இரு கல்லூரி மாணவர்கள் கைது

kaleelrahman

மொபைல் ஆப் மூலம் சமையல்காரரை ஒரினச் சேர்க்கைக்கு அழைத்து நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த இரு கல்லூரி மாணவர்கள் கைது. செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கணபதி தாரணி நகர், 8வது வீதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (34), இவர் காந்திபுரம் காளிங்கராயன் வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், டீடரநன ஆப் மூலம் ஓரினச் சேர்க்கைக்கி விருப்பம் தெரிவித்து ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். இதனையடுத்து இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட சிவானந்தா காலனி காந்தி நகரைச் சேர்ந்த பிரசாத் (19) என்பவர் ஒரினச் சேர்க்கைக்காக வடகோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பின்புறம் வரச்சொல்லியுள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற கங்காதரனை, பிரசாந்த், நிஷாந்த், மாணிக்கம் ஆகிய 3 பேரும் கத்தியைக் காட்டி மிரட்டி கங்காதரனை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அவரிடமிருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் கங்காதரன் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரசாந்த் மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் மீது மேலும் அபிராம் என்ற நபர் புகார் அளித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றும் தன்னை ஆப் மூலம் அழைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 17 பேரிடம் இதுபோல பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து இவர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகாரளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.