குற்றம்

வீட்டு வாடகைப் பிரச்னை -உடலில் தீ வைத்துக் கொண்ட நபர் உயிரிழப்பு; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

வீட்டு வாடகைப் பிரச்னை -உடலில் தீ வைத்துக் கொண்ட நபர் உயிரிழப்பு; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

webteam

வீட்டு வாடகைப் பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தியதால், வேதனையடைந்து உடலில் தீ வைத்துக் கொண்ட சீனிவாசன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புழல் அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகைத் தரவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து கடந்த 29-ஆம் தேதி ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து நேற்று நிகழ்விடத்திற்கு வந்த புழல் காவல் ஆய்வாளர் பென் சாம், சீனிவாசனிடம் விசாரணை நடத்தி அவரை காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த சீனிவாசன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் வீடியோ வழியாகப் பேசி வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் சீனிவாசனிடம் விசாரணை நடத்திய பென்சாம்-வை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது  சீனிவாசன் சிகிச்சைப்பலன்றி உயிரிழந்துள்ளார்.