srilankan pt desk
குற்றம்

இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட 212 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

பல கோடி ரூபாய் மதிப்பிலான 212 கிலோ ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் ஆழ்கடல் மீன்பிடி படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

webteam

இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் இணைந்து புலனாய்வு நடத்தினர். இந்த நடவடிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கடல் வழியாக இலங்கைக்குள் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுடன் வந்த ஆழ்கடல் மீன்பிடி படகை நடுக்கடலில் அவர்கள் பிடித்துள்ளனர்.

boat

இதையடுத்து இலங்கை கொழும்பு அருகே உள்ள டோண்ட்ரா மீன்பிடி துறைமுகத்திற்கு படகை கொண்டு சென்று இலங்கை கடலோர காவல்படையினர் படகில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் படகில் இருந்து 212 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தாம் பெட்டமைன் (ஐஸ் போதை பொருள்) ஆகியவை கைபற்றப்பட்டு படகில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை நேரில் வந்து ஆய்வு செய்தார். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று தெரியவருகிறது.