குற்றம்

கவரிங் நகைகளை அடமானம் வைத்த தங்க நகை மதிப்பீட்டாளர் கைது

கவரிங் நகைகளை அடமானம் வைத்த தங்க நகை மதிப்பீட்டாளர் கைது

நிவேதா ஜெகராஜா

கோவையில் உள்ள தனியார் வங்கியில், கவரிங் நகைகளை அடமானம் வைத்து, 32 லட்ச ரூபாய் கையாடல் செய்த வங்கியின் தங்க நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காந்திபுரத்தில் உள்ள வங்கியில், தங்க நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்த ஜெய்சங்கர் என்பவர், வங்கியின் வாடிக்கையாளர்களிடம் கவரிங் நகைகளைக் கொடுத்து, அடமானம் வைக்க வைத்துள்ளார். தங்க நகை என நம்பி 14 வாடிக்கையாளர்கள் கவரிங் நகைகளை அடகு வைத்துள்ளனர். அதன் மூலமாக ரூ.31,82,000-ஐ ஜெய்சங்கர் கடனாகப் பெற்றுள்ளார்.

வங்கியில் தணிக்கையின் போது, கவரிங் நகைகளை அடமானம் வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த ஜெய்சங்கரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல லட்ச ரூபாய் கடனை அடைப்பதற்காக அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.