குற்றம்

வெடித்தது திருமண ’கிஃப்ட்’: மாப்பிள்ளை பலி, புதுப்பெண் சீரியஸ்!

வெடித்தது திருமண ’கிஃப்ட்’: மாப்பிள்ளை பலி, புதுப்பெண் சீரியஸ்!

webteam

திருமணத்துக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருள் வெடித்ததில் புதுமாப்பிள்ளை உடல் சிதறி உயிரிழந்தார். மணமகள் படுகாயமடைந்தார். 

ஒடிசா மாநிலம் போங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ருதிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. புதன்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். வரவேற்புக்குப் பின் பரிசுப் பொருட்களை மணமக்கள் வீட்டில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த பரிசுப் பொருளில் ஒன்று நேற்று திடீரென்று வெடித்தது. இதில் சுரேஷ் அந்த இடத்திலேயே பலியானார். அவரின் பாட்டியும் பலியானார். மணமகள் ஸ்ருதியும் உறவினரான சிறுவனும் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த கிஃப்டை கொடுத்த ’கொலைவெறி’ நண்பர் யார் என்று விசாரித்து வருகின்றனர்.