கஞ்சா விற்பனை வழக்கில் கைதான மாணவர்கள் pt desk
குற்றம்

ஈரோடு: கஞ்சா விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர் உட்பட நான்கு இளைஞர்கள் கைது

ஈரோடு அருகே கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியதோடு விற்பனைக்கும் வைத்திருந்த கல்லூரி மாணவன் உள்பட நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் அருகே நஞ்சை ஊத்துக்குளியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவன் பிரித்திவிராஜ் (19), சிவக்குமார் (22), கமலக்கண்ணன் (20), ராகுல் (22) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து அவர்களை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

மொடக்குறிச்சி காவல் நிலையம்

அப்போது அவர்கள் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இவற்றை போதைக்காக பயன்படுத்தி வருவதுடன் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து நால்வரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் 10 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.