வாடிக்கையாளர்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் போலியாக கையொப்பமிட்டு நிதி நிறுவன நிறுவன அலுவலர்களே அடமானம் வைத்து நூதன கொள்ளையில் ஈடுபட்டது அம்பலமானது.
கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஐசிஎல் ஃபின்கார்ப் என்ற தனியார் நிதி நிறுவனம், நகைகளை அடகு வைத்து வட்டிக்கு பணம் தந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் கோவை குனியமுத்தூர் கிளையில் தலைவராக கார்த்திகா, மேலாளராக சரவணகுமார், நிதி நிறுவன கிளையின் துணை தலைவராக சத்யா பணியாற்றியிருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த கிளையில் வருடாந்திர தணிக்கைக்காக தங்க நகைகள் சரிபார்த்து கணக்குகளை சரிபார்த்திருக்கின்றனர். அப்போது லாக்கரில் போலி நகைகள் வைத்திருந்தனை தணிக்கை குழு, நகை மதிப்பீட்டு குழு கண்டுபிடித்தனர். உடனடியாக நிறுவனத்தில் பணியாற்றியவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் குனியமுத்தூர் கிளையில் தலைவராக கார்த்திகா, மேலாளராக சரவணகுமார், நிதி நிறுவன கிளையின் துணை தலைவராக சத்யா கூட்டு சதி செய்தது விசாரணையில் அம்பலமானது.
அதாவது இந்த மூவரும் முன்னதாக கிளையில் வரவு செலவு வைத்திருக்கின்ற வாடிக்கையாளர்கள், உறவினர்கள் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் என 10க்கும் மேற்பட்டோரின் ஆவணங்களை பயன்படுத்தி போலி கையொப்பமிட்டு மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதாவது 597 கிராம் போலி நகைகளை 25 பொட்டலங்களில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு கடன் தந்தது போல கணக்கு காட்டி 26 லட்சம் ரூபாயை நூதன கொள்ளையடித்திருக்கின்றனர். நிதி நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமின்றி அடகு வைக்க வந்த 11 நகை பொட்டலங்களில் இருந்த 227 கிராம் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை எடுத்து அதற்கு பதிலாக போலி நகைகளை பாக்கெட்டில் அடைத்து லாக்கரின் அடகு நகையாக கணக்கு காட்டியிருக்கின்றனர்.
இதுகுறித்து நிதி நிறுவனம் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் உதவி ஆணையாளர் பார்த்திபன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் ரேணுகா வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட சத்யா கைது செய்யப்பட்ட நிலையில் போலி நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கார்த்திகா, சரவணகுமார் ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: கடலூர்: 13 வயது சிறுவன் பைக் ஓட்டிய விபரீதம்; பறிபோனது 3 வயது குழந்தையின் உயிர்