குற்றம்

‘ஹெச்.சி.எல்.லில் உங்களுக்கு வேலை கிடச்சாச்சு’... மோசடியில் பணத்தை சுருட்டிய கும்பல்..!

‘ஹெச்.சி.எல்.லில் உங்களுக்கு வேலை கிடச்சாச்சு’... மோசடியில் பணத்தை சுருட்டிய கும்பல்..!

Rasus

ஹெச்.சி.எல் நிறுவனத்திற்கு வேலை எடுப்பதுபோல் எடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரபல மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனத்திற்கு பகுதிநேர வேலைக்கு ஆட்கள் தேவை என்று ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்தி பரவியிருக்கிறது. விளம்பரத்தை பார்த்த பலரும், நண்பர்கள் மூலமாக அறிந்தவர்களும் உடனடியாக வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். பின்னர், கார்த்திக், திவ்யா உள்ளிட்ட 3 பேர் தங்களை ஹெச்.சி.எல் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி எனக் கூறி விண்ணப்பித்த ஆயிரக்கணக்கானோரிடம், ஒருவருக்கு 4000 ரூபாய் என்ற அளவில் 40 லட்சத்துக்கும் மேல் வசூல் செய்திருக்கின்றனர்.

இதனையடுத்து மென்பொருள் நிறுவனம் வேலைக்கு ஆள் சேர்ப்பது போல் முறையாக தேர்வு செய்துள்ளனர். தேர்வானவர்களுக்கு தனியார் ஹோட்டல் ஒன்றில் 2 நாள் பயிற்சி அளித்ததோடு ஐ.டி கார்டுகளும் வழங்கியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்து வேலை பார்க்க லேப்டாப்புகள் தருவதாகவும் கூறியுள்ளனர். பின்னர் நீண்ட நாள் ஆன பிறகும் லேப்டாப் எதுவும் வராததால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட மென்பொருள் நிறுவனத்தை அணுகியிருக்கின்றனர். அப்போதுதான் அது மோசடி என தெரியவந்துள்ளது.

மோசடி செய்தவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்கவும், பணத்தை மீட்டு தரக்கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதன்பேரில் மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.