குற்றம்

``திமுகவினர் முறைகேடு செய்ய காவல்துறையினர் உடந்தை” - வீடியோ ஆதாரத்துடன் பேசிய இபிஎஸ்!

``திமுகவினர் முறைகேடு செய்ய காவல்துறையினர் உடந்தை” - வீடியோ ஆதாரத்துடன் பேசிய இபிஎஸ்!

நிவேதா ஜெகராஜா

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் சென்னையில் அதிகளவு கள்ள ஓட்டு போட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்தார்.

மேலும் பேசிய அவர், ``சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணம் தருவதை காவல்துறையோ, தேர்தல் ஆணையமோ தடுக்க முடியவில்லை. திமுகவினர் பணம் கொடுக்க, காவல்துறையினர் உடந்தையாக இருந்தனர். கோவை, சென்னை மாநகராட்சியில் ரவுடிகள், குண்டர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியரிடம், மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தனர். ஆனால் ஆட்சியர், ஆணையர் நடவடிக்கை எடுக்காத்தால் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றோம். சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 110, 115 வார்டுகளில் அதிகாரிகளை மிரட்டி கள்ள ஓட்டு போட்டது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக ரவுடிகளை வைத்து கள்ள ஓட்டு பதிவு சைய்யப்பட்டுள்ளது. திமுக மக்கள் செல்வாக்கை இழந்துள்ளது. தேர்தல் ஆணையம் திமுகவின் கைபாவையாக சையல்பட்டு வருகிறது. எடப்பாடியில் மாவட்ட எஸ்பியே சிறை பிடிக்கப்பட்டார். இனி எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் ஜனநாயகப்படி வாக்களிக்க முடியாது. சென்னையில் வாக்கு குறைந்ததற்கு, ரவுடிகள் அச்சுறுத்தலே காரணமாகும்.

அதிமுக ஆட்சியில் உரிய பாதுகாப்பு இருந்த காரணத்தால் வாக்கு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க செல்ல முடியாத நிலையை, காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையமும், அதிகாரிகளும் திமுகவின் கைப்பாவையாக மாறிவிட்டனர்.

மேலும், வரும் 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புபடி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஒரு வார்டு வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவித்த பின்னரே, அடுத்த வார்டு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு வார்டின் வாக்கு எண்ணிக்கை முடிவையும் சிசிடிவி காமிராவில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் ஜனநாயக படி தேர்தல் நடத்தவில்லை” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.