குற்றம்

சட்டவிரோதமான டாஸ்மாக்: ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு ரகளையில் இறங்கிய மது குடிப்போர்

சட்டவிரோதமான டாஸ்மாக்: ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு ரகளையில் இறங்கிய மது குடிப்போர்

Sinekadhara

சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. போட்டி போட்டுக்கொண்டு மதுபாட்டில் வாங்க வந்த மதுப்பிரியர்கள் ஒருவரை ஒருவர தாக்கிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

சென்னை அம்பத்தூரில் கொலை, கொள்ளை, வழிப்பறி என குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை உறுதிசெய்யும் வகையில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் அலுவலகம் அருகே செயல்படும் டாஸ்மாக் பாரில் நள்ளிரவு 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுபாட்டிலை வாங்கி செல்லும் மது பிரியர்கள் அங்கேயே ரகளையில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் சர்வ சாதாரணமாக மது விற்பனை நடைபெற்றது. அரை ஷட்டர் திறந்துள்ள டாஸ்மாக் பாரில் மதுபிரியர்கள் திருடன் போல் குனிந்துசென்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். மதுபாட்டிலை வாங்கிக்கொண்டு அங்கேயே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டையிட்டனர்.   இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அம்பத்தூர் உதவி ஆணையர் அலுவலகம் அருகே கள்ளச் சந்தையில் மதுவிற்பனையை மதுவிலக்கு காவல்துறை கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.