அரசு அலுவலகங்களிலிருந்து கணக்கில்வராத ரூ.18 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.
தீபாவளியையொட்டி லஞ்சம், பரிசுப்பொருள்களேதும் அரசு அலுவலகங்களில் பெறப்படுகிறதா என்பதை அறிய, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்படி நடத்தப்பட்ட சோதனையில் ரூ.18.20 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க... "லஞ்சம், போலி சான்றிதழ், மதம்..." - ஆர்யன் கான் வழக்கு அதிகாரி சமீரை சுற்றும் சர்ச்சைகள்!
கணக்கில் வராத ரூ.18,20,030 ரொக்கத்துடன் ரூ.6,47,180 மதிப்பிலான மதுபானங்கள், 36 பெட்டி பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மின்சாரம், போக்குவரத்து, தீயணைப்பு, பதிவுத்துறை, வணிகவரி, காவல்துறை, டாஸ்மாக் உள்ளிட்ட 14 அரசுத் துறைகளைச் சேர்ந்த 33 அலுவலகங்களில் சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.