குற்றம்

திண்டுக்கல்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 12 பேர் கொண்ட கும்பல் கைது

திண்டுக்கல்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 12 பேர் கொண்ட கும்பல் கைது

webteam

வத்தலகுண்டில் தொடர் சங்கிலி அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா பிரிக்கப்பட்டு பல்வேறு பகுதியில் சில்லறை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை சுற்றி வளைத்த அவர் வைத்திருந்த கஞ்சா பண்டல்களை கைப்பற்றி தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர், 10 கிலோ கஞ்சா கொண்டு வந்ததும். அதனை பிரித்து விற்பனை செய்திருப்பதும் தெரியவந்தது

இதைத் தொடர்ந்து வத்தலகுண்டு, புதுப்பட்டி, பள்ளபட்டி, செட்டியபட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் தனித்தனியாக பிரிந்து சென்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வினோத்குமாரிடம் வாங்கிய கஞ்சாவை சில்லறை விற்பனைக்கு பாக்கெட்டுகளாக தயாரித்துக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

வத்தலகுண்டு பகுதியில் தொடர் சங்கிலி போல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் அடங்கிய கும்பல் மீது வழக்குப் பதிவு செய்த வத்தலகுண்டு போலீசார் கும்மிடிபூண்டி வினோத் குமார் உள்ளிட்ட 12 பேரை சிறையில் அடைத்தனர்