Fake Doctor arrested pt desk
குற்றம்

தருமபுரி: அனுமதியின்றி மருந்துக்கடை நடத்தியதோடு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டியில் முறையாக மருத்துவம் படிக்காமல் போலியாக சர்டிபிகேட் வாங்கி, பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை காவல் துறையினர் கைது செய்தனர்.

webteam

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெங்கடேஸ்வரா எனும் பெயரில் ஆங்கில மருந்தகம் வைத்துள்ளார். இதையடுத்து அதே கடையில் கடநத சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு, ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

Medical

இதையடுத்து பொதுமக்கள் முதலமைச்சர் தனி பிரிவுக்கு அளித்த புகாரின் பேரில் நேற்று தருமபுரி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாந்தி உத்தரவின் படி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் அருண், மருந்துகள் ஆய்வாளர் சக்திவேல், துணை தாசில்தார் சக்திவேல் ஆகியோர் மோளையானூரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வெங்கடேசன் முறையாக மருத்துவம் படிக்காமல் போலியாக டிப்ளமோ சான்றிதழை வைத்துக் கொண்டு ஆங்கில மருந்து கடை நடத்தியதோடு, மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மருந்து கடையை பூட்டி சீல் வைத்து, வெங்கடேசனை, பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.