குற்றம்

இயற்கை உபாதைக்காக சென்ற மாணவியை படம் பிடித்தவருக்கு தர்மஅடி

இயற்கை உபாதைக்காக சென்ற மாணவியை படம் பிடித்தவருக்கு தர்மஅடி

kaleelrahman

வேடசந்தூர் அருகே 16 வயது மாணவியை படம்பிடித்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் புகார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் மண் அள்ளி கொண்டிருந்த சொட்டமாயனூரைச் சேர்ந்த பாண்டியராஜன் (30) என்பவர் தனது செல்போனில் மாணவியை படம் பிடித்துள்ளார். இதனை கண்ட மாணவி பயத்தில் சத்தம் போட்டுள்ளார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பாண்டியராஜனிடம் விசாரித்தபோது ஆத்திரமடைந்த பாண்டியராஜன் அவருடைய தம்பி சேரன்ராஜ் தந்தை வி.சி.ராஜேந்திரன் உறவினர் தர்மர் ஆகியோர், ஆயுதங்களை காட்டி மக்களை மிரட்டி தரக்குறைவாக பேசியுள்ளனர்.


ஒன்று திரண்ட பொதுமக்கள் மாணவியை காப்பாற்றி சம்பந்தப்பட்ட நபருக்கு தர்ம அடி கொடுத்து வடமதுரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். வடமதுரை காவல் துறையினர் மந்தை குளத்தில் மண் அள்ளிய சேரன்ராஜ், வி.சி.ராஜேந்திரன், தர்மர், முத்துகுமார், மற்றும் மாணவியை படம் பிடித்த பாண்டியராஜன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.