Accused pt desk
குற்றம்

வேலூர்: இரட்டிப்பாக பணம் தருவதாகக் கூறி ரூ.55.55 லட்சம் மோசடி – கணவன் மனைவி கைது

webteam

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் அருகந்தம் பூண்டி மேட்டு தெருவைச் சேர்ந்தவர்கள் பாலு – உமா தமபதியர். பாலு, ஓட்டல் வைத்து நடத்தி வந்த நிலையில், தனது மனைவி உமாவின் நெருங்கிய தோழியான காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரிடம், ரயில் நிலைய காண்ட்ராக்ட் எடுக்க உள்ளதாகவும், பெங்களூருவில் புதிய ஓட்டல் ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறி, அதற்கு பணம் தேவைப்படுகிறது. கொடுக்கும் பணத்திற்கு இரண்டு மடங்காக திருப்பிக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

Arrested

இதை நம்பிய மகாலட்சுமி, கடந்த 2022-ஆம் ஆண்டு 55 லட்சத்து 55 ஆயிரத்தை ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால், தம்பதியினர் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியதோடு, பணம் கேட்டால் அவரை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தும் வந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி, இதுகுறித்து வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் எஸ்பி மணிவண்ணன் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் காந்திமதி தலைமையிலான காவல்துறையினர், தம்பதியினர் உமா (39), பாலு (41) ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் நேற்று (09.08.2024) காட்பாடியில் கைது செய்தனர்.