குற்றம்

பிளஸ் 2 மறுத்தேர்வில் பங்கேற்காத மாணவிக்கு திருமணம் - அதிகாரிகள் விசாரணை

பிளஸ் 2 மறுத்தேர்வில் பங்கேற்காத மாணவிக்கு திருமணம் - அதிகாரிகள் விசாரணை

webteam

மதுரையில் இன்று நடைபெற்ற பிளஸ் 2 மறு தேர்வுக்கு வராத மாணவிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதா என்பது குறித்து சமூக நலத் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் பிளஸ் 2 மறுத்தேர்வு காலை 10 மணிக்கு துவங்கியது. 8 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில் ஏழு மாணவ மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 8 மாணவர்களுக்கு ஏட்டு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை சொக்கிகுளம் காக்கைபாடினியார் மேல்நிலைப் பள்ளி மாணவி அஞ்சலி என்பவர் ஒதுக்கப்பட்ட மையத்திற்கு வரவில்லை.

இருப்பினும் அங்கு தலைமைக் கண்காணிப்பாளர் தேர்வு மைய மேற்பார்வையாளர் உள்ளிட்ட மூன்று பணியாளர்கள் இன்று தேர்வு பணியில் ஈடுபட்டனர். மாணவி தேர்வு மையத்திற்கு வராததால் பணியில் இருந்த பணியாளர்கள் 10.30 வரை காத்திருந்தனர். அவர் வராத காரணத்தினால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு மாணவி வராதது குறித்த தகவலை அளித்தனர்.

சம்பந்தப்பட்ட மாணவி அஞ்சலி திருமணமாகி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் திருமணம் ஆனது குறித்து மதுரை மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவிக்கு 18 வயது நிரம்பி திருமணம் நடைபெற்றதா அல்லது மாணவிக்கு நடைபெற்ற திருமணம் குழந்தை திருமணமா என்பது குறித்து மதுரை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சாந்தி விசாரித்து வருகிறார்.