Accused pt desk
குற்றம்

வீடியோ கால் ஸ்க்ரீன் ஷாட்டை வைத்து இளம் பெண்ணை மிரட்டிய இளைஞர் - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்!

webteam

செய்தியாளர்: சாந்தகுமார்

இளம்பெண் ஒருவர் சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த 27.02.2024 ஆம் தேதி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், அந்த பெண்ணும், சுடரொளி என்பவரும் சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததோடு ஒரே தெருவிலும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் Whats app video Call ல் அடிக்கடி பேசிவந்துள்ளனர். அப்போது சுடரொளி, அனுமதியின்றி அந்த பெண்ணின் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அவருடைய மொபைலில் Screen Record மற்றும் Screen shot எடுத்து வைத்துள்ளார்.

cyber crime

இதையடுத்து அந்த பெண், சுடரொளியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததை அடுத்து கோபத்தில் இருந்த சுடரொளி, Photos மற்றும் Videos சமூக வலைதளங்களில் Upload செய்துவிடுவேன் என மிரட்டி கடந்த 09.02.2024 ம் தேதி Instagram பக்கத்தில் பதிவேற்றம் செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். அதன் பேரில், சுடரொளி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த பெண் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் சுடரொளி Instagram id செல்போன் மற்றும் மொபைல் எண் பற்றிய விபரங்களை சேகரித்து Instagram கணக்கை பயன்படுத்திய IP Log விபரம் ஆகிய அனைத்து தகவல்களும் பெறப்பட்டு, செல்போன் எண்ணை பயன்படுத்தி மேற்படி ஐInstagram கணக்கை துவக்கி இருப்பதும் தெரியவந்தது.

Arrested

செல்போன் எண்ணை பயன்படுத்தி வரும் நபர் சுடரொளி (35), அய்யனார் கோவில் தெரு, திருவங்காடு, சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மற்றும் சைபர் க்ரைம் கூடுதல் துணை ஆணையர் தலைமையில், ஆய்வாளர் சாலினி மற்றும் உதவி ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் 23.05.2024 தேதி இரவு சீர்காழி சென்று சுடரொளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.