Accused pt desk
குற்றம்

சென்னை| பேஸ்புக் மூலம் பழகி ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி – ஒருவர் கைது

பேஸ்புக் மூலம் பழகி ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் பணத்தை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை அமைந்தகரை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் கடந்த மார்ச் மாதம் அமைந்தகரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ”ரமேஷ் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, ரயில்வே துறையில் பணி புரிவதாகவும், ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினார்.

இதையடுத்து என்னிடம் ரூ.3 லட்சம் வரை பணத்தை பெற்ற அவர், இதுவரை வேலை வாங்கித் தரமால், பணத்தையும் திருப்பிதராமல் ஏமாற்றி வருகிறார். இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

Arrested

புகாரின் அடிப்படையில் அமைந்தகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமேஷை தேடிவந்தனர்.

இந்நிலையில், ரமேஷ் பெரம்பலூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து போலீசார் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையித்தில் நின்று கொண்டிருந்த ரமேஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் ரமேஷ், சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், ஆகாஷிடம் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.