குற்றம்

சென்னை: போதைக்கு மாத்திரை தராததால் மருந்தக உரிமையாளருக்கு அடி உதை

சென்னை: போதைக்கு மாத்திரை தராததால் மருந்தக உரிமையாளருக்கு அடி உதை

kaleelrahman

சென்னை அருகே மருந்து சீட்டு இல்லாமல் போதைக்காக இலவச மாத்திரை கேட்ட நபருக்கு மாத்திரை தராததால் மருந்தக உரிமையாளரை தக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை தாம்பரத்தை அடுத்த கடப்பேரியில் சாய்ராம் மெடிகல்ஸ் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வருபவர் தினேஷ் குமார் (28), இந்நிலையில் இவரது கடைக்கு வந்த நபர் போதைக்காக சில மாத்திரைகளை மருந்துச் சீட்டு இல்லாமல் இலவசமாகவும் கேட்டுள்ளார்.

மருந்தக உரிமையாளர் போதைக்கு மாத்திரையை தராததால் ஆத்திரத்தில் சென்ற நபர் அவரது நண்பரை அழைத்து வந்து மருந்தக உரிமையாளரை அடையாளம் காட்டிவிட்டு சென்றுள்ளார். அவரும் மருந்தக உரிமையாளரை இரும்பு கம்பியால் சரமாறியாக தாக்கி இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது பொதுமக்கள் அவரை பிடித்து தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் மருந்தக உரிமையாளரை தாக்கியது பம்மல் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான கோபி (எ) கோபிநாத் (25), என்பதும் இவரது நண்பர் நெடுங்குன்றத்தை சேர்ந்த பரத் என்பவர் மருந்தகத்தில் போதைக்காக மாத்திரை கேட்டு தராததால் அவரது சிறை நண்பரான கோபிநாத்திடம் கடை உரிமையாளரை அடிக்கும் படி சொல்லியுள்ளார். அதன் காரணமாக கோபிநாத் மருந்தக உரிமையாளரை தாக்கி, இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் 294(டி), 384, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.