தாம்பரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் செயல்பட்டு வரும் பிரபல கல்லூரியில் பயிலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கூகுள் பேவில் பணம் பெற்று மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.
அதே போல் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு மாணவர் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வோரை பிடிக்க கலால் ஆய்வாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் பவன் குமார், ஜித்தேந்திர ரெட்டி, அப்துல் அல்தாப், பரத், விஷால் ஆகிய ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சேலையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சேலையூர் போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.