கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிறார் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் சந்தகேத்திற்கு இடமான முறையில் ஒரு கும்பல் சுற்றி வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது, அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அவர்களை மடக்கி பிடித்து காவல்நிலையில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சல்மான் பாட்சா (21), கல்லூரி மாணவர், முகமது ஹஜாஸ் (19), தனியார் நிறுவன ஊழியர், சாஹீல் அஹமத் (20), கறிக் கடை உரிமையாளர், பைசல் ஹுசைன் (19), மெக்கானிக் உமர் (19), மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனம், 3 செல்போன், ஒரு டேப் ஆகியவற்றை பறிமுதல் செய்யதனர். திருட்டில் ஈடுபட்டு வரும் அவர்கள் பங்களா வீட்டை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து, கானாத்தூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஐந்த பேரை சிறைக்கும் பள்ளி மாணவரை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.