குற்றம்

தந்தை மகன் உயிரிழப்பு விவகாரம் - சிபிசிஐடி வழக்குப்பதிவு

தந்தை மகன் உயிரிழப்பு விவகாரம் - சிபிசிஐடி வழக்குப்பதிவு

webteam

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இதில் பல உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. இந்த வழக்கு குறித்து மாஜிஸ்திரேட் விசாரணையும் மேற்கொண்டார்.

இதனிடையே ஜெயராஜ் மற்றும் பென்னீஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளனர், எனவும் சாட்சியம் அளித்த பெண் காவலரை மிரட்டும் வகையில் காவலர்கள் நடந்து கொண்டதாக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து தந்தை மகன் இருவரின் முதல்நிலை உடற்கூராய்வு அறிக்கை நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், தற்போது இந்த வழக்கின் ஆவணங்களை பெற்ற டிஎஸ்பி அணில்குமார் சிபிசிஐடி வழக்கு 1,2 என பதிவு செய்துள்ளார்.