ஆனந்த ராஜ் pt desk
குற்றம்

அரியலூர்: அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.5.34 கோடியை இழந்த பெண் - ஒருவர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்

அரியலூரில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.5 கோடியே 34 லட்சம் பணத்தை இழந்த பெண். ஏமாந்தபின் அளித்த புகாரின் பேரில், அவரை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டார்.

webteam

சேய்தியாளர்: வெ.செந்தில்குமார்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் பார்த்திபன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். பார்த்திபன், தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் தாய் சாந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் சாந்தியின் தம்பி சந்திரசேகர் என்பவருக்கு, பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆனந்தராஜ் பங்குச் சந்தை வர்த்தகம் செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறியுள்ளார்.

Arrested

இதனால் அவரை நம்பிய சாந்தி 6 சதவீத வட்டிக்கு பணத்தை கொடுக்கத் தொடங்கியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துள்ளார். அப்படி மொத்தமாக 5 கோடியே 34 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இதற்கு இரண்டு மாதத்திற்கு சுமார் ரூ.68 லட்சம் வட்டியாக ஆனந்த ராஜ் திருப்பி கொடுத்துள்ளார். அதன் பிறகு வட்டி பணத்தையும் அசல் பணத்தையும் திருப்பித் தரவில்லை.

பல முறை கேட்டும் தராததால் இது குறித்து சாந்தி அரியலூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆனந்த் ராஜ், சாந்தியிடம் வாங்கிய பணத்தை கிரிப்டோ கரன்சி மற்றும் பங்குச் சந்தை ஆன்லைன் வர்த்தகங்களில் முதலீடு செய்ததாக தெரிய வருகிறது.

Police station

அதில், இழப்பு ஏற்பட்டதால் பணம் தர முடியவில்லை என போலீசார் விசாரணையில் ஆனந்தராஜ் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் ஆனந்த ராஜை கைது செய்து சென்னையில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளனர்.