குற்றம்

திருச்சி: லஞ்சம் வங்கிய விஏஓ - மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

திருச்சி: லஞ்சம் வங்கிய விஏஓ - மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

Sinekadhara

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் வடக்குவெளி கிராம நிர்வாக அலுவலர் நவநீதன் பட்டா மாறுதலுக்காக ரூபாய் 1000 லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.

துறையூர் அருகே உள்ள கண்ணனூர் வடக்கு வெளி கிராமத்திற்கு உட்பட்ட பெத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் தன்னுடைய நிலத்தின் பட்டா எண் மாற்றங்களுக்காக கண்ணனூர் வடக்குவெளி கிராம நிர்வாக அதிகாரி நவநீதனை அணுகியுள்ளார். அதற்கு நவநீதன் ரூ. 2,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பதி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இன்று காலை ரசாயனம் தடவிய 1000 ரூபாயை கிராம நிர்வாக அலுவலர் நவநீதனிடம் திருப்பதி வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நவநீதனை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து கொரானா பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பின்னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் கண்ணனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.