வயிற்றில் கத்தரி - ஆந்திரா மாவட்டம் ஏளூர் புதியதலைமுறை
குற்றம்

பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்கள்!

PT WEB

ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாவட்டம் ஏளூரை சேர்ந்த பெண் ஒருவர் 4 மாதங்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக மருத்துவமனையை நாடிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆந்திரா மாவட்டம் ஏளூர்

அதன்படி பரிசோதனையில் அப்பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. இது எப்படி அவரது வயிற்றினுள் வைத்து தைக்கப்பட்டது என்று ஆராய்ந்தபோது, அதே மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரசவத்திற்காக தான் அனுமதிக்கப்பட்டதையும் தனக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததையும் தெரிவித்துள்ளார் அவர். இதைத்தொடர்ந்து பிரசவத்தின் போதுதான் அவரது வயிற்றில் கவன குறைவாக கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்டதென்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிகழ்வு நடந்ததை மறைப்பதற்காக அப்பெண்ணை விஜயவாடா மருத்துவமனைக்கும் அனுப்பியுள்ளனர். தற்போது அந்த கத்திரிக்கோல் விஜயவாடா மருத்துவமனை மருத்துவர்களால் அகற்றப்பட்டு, அவருக்கு விஜயவாடா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது அவர் நலமுடன் இருக்கிறார். இருப்பினும் இந்த செய்தி, கடும் அதிர்வலைகளை ஏற்பட்டுள்ளது.

- ஜெனிட்டா ரோஸ்லின்.S