குற்றம்

ஆம்பூர் டிஎஸ்பி கையும் களவுமாக கைது: மக்கள் கொண்டாட்டம்..!

ஆம்பூர் டிஎஸ்பி கையும் களவுமாக கைது: மக்கள் கொண்டாட்டம்..!

Rasus

லஞ்சப்புகாரில் கைதான ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜின் சென்னை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், மாதந்தோறும் குவாரியில் மணல் அள்ளி விற்பனை செய்வதற்காக டிஎஸ்பி தன்ராஜ், எஸ்ஐ லூர்து ஜெயராஜ் ஆகியோருக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மணல் குவாரி மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பணம் தரக்கோரி காவல்துறையினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக பன்னீர்செல்வம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ஒரு லட்சத்து 45,000 ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக வழங்கியபோது ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் தன்ராஜ் மற்றும் எஸ்ஐ லூர்து ஜெயராஜ் ஆகியோர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே சென்னையில் உள்ள டிஎஸ்பி தன்ராஜின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். லஞ்ச புகாரில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.