குற்றம்

தம்மை பற்றிய அவதூறு செய்திகளை நிறுத்த நடவடிக்கை தேவை : ராஜேஷ் தாஸ் கடிதம்

தம்மை பற்றிய அவதூறு செய்திகளை நிறுத்த நடவடிக்கை தேவை : ராஜேஷ் தாஸ் கடிதம்

Veeramani

தம்மை பற்றி தவறாக பரப்பப்படும் செய்திகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்திற்கு, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மூத்த காவல் துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், ராஜேஷ் தாஸ் மீதான புகார் மீது சுதந்திரமாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்திற்கு ராஜேஷ் தாஸ் எழுதியுள்ள கடிதத்தில், தம்மைப் பற்றி கேவலமாகவும் அவதூறாகவும் சங்கத்தின் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் குரூப்பில் செய்திகள் பரப்பப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்று கருத்துத் தெரிவிப்பது தன்னுடைய வாழ்க்கையிலும் சுதந்திரத்திலும் தனிப்பட்ட உரிமையும் தலையிடுவது போன்று இருப்பதாக தெரிவித்துள்ள ராஜேஷ் தாஸ், தவறான செய்திகளை வெளியிட்டு, தனது பெயரை கெடுக்கும் அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ குற்ற அவதூறு வழக்கு பதியவும் இழப்பீடு கேட்கவும் உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே சங்க நிர்வாகிகள் தன்னைப்பற்றி தவறாக பரப்பப்படும் செய்திகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.