பாலியல் வன்கொடுமை PT
குற்றம்

கோவை| வேலை விஷயமாக வீட்டிற்கு அழைத்து அத்துமீறிய பேராசியர்.. புத்திசாலித்தனத்தால் தப்பித்த இளம்பெண்!

கோவையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பேராசிரியரிடமிருந்து லொகேஷன் மூலம் பெண்ணை காவல்துறையினர் பாதுகாப்பாய் மீட்டனர்.

PT WEB

கோவை, கல்வீரன்பாளையம் முருகன் நகர், நேரு தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (45). கல்லூரி பேராசிரியரான இவரிடம், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 25 இளம்பெண் ஒருவர் வேலை விவகாரமாக பேசி வந்துள்ளார். நேற்று வேலை விவகாரமாக சந்திக்கும்படி சிவபிரகாசம் கூறியதை அடுத்து, சான்றிதழ்களுடன் அந்த இளம்பெண் கோவையில் உள்ள பேராசிரியர் சிவப்பிரகாசம் வீட்டிற்கு மதியம் வந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அப்போது வீட்டில் சிவப்பிரகாசம் மட்டும் இருந்துள்ளார். முதலில் பேசிக்கொண்டே இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட தொடங்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்தபெண் தடுத்த போது அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

லொகேஷன் மூலம் பாதுகாக்கப்பட்ட இளம்பெண்..

அவரிடம் இருந்து தப்பிய இளம்பெண் வீட்டில் இருந்த கழிவறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டு கொண்டுள்ளார். பிறகு அங்கு இருந்து கொண்டே செல்போனில் அவரது தோழிக்கு லொகேஷன் அனுப்பியுள்ளார். அவரது தோழி அந்த பகுதி உள்ள வடவள்ளி காவல்துறைக்கு தகவலும், லொகேஷன் பகிர்ந்துள்ளார்.

உடனே வடவள்ளி காவல்துறையினர், பேராசிரியர் சிவப்பிரகாசம் வீட்டிற்கு சென்று, கழிவறைக்குள் இருந்த பெண்ணை மீட்டனர். சம்பவம் தொடர்பாக பெண் அளித்த புகாரில் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.