Police station pt desk
குற்றம்

நெல்லை: மாணவர்களிடையே முன்விரோதம் - அச்சுறுத்த அரிவாளுடன் வந்த பத்தாம் வகுப்பு மாணவர்

திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு மாணவனின் பையில் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 2 பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

webteam

செய்தியாளர்: மருதுபாண்டி

நெல்லை மாவட்டம் தாழையூத்துப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் சீரான இடைவெளியில் மாணவர்களின் புத்தகப்பை உள்ளிட்டவைகளை சோதனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அப்படி நேற்றும் மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்தனர். அப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் பையில் அரிவாள் இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

School

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை அவர்கள் தங்கள் தலைமையாசிரியரிடம் தெரிவித்த நிலையில், அவர் தாழையூத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அரிவாள் எடுத்து வந்த மாணவர் மற்றும் அவருடன் தகராறில் ஈடுபட்ட சக மாணவர்கள் என இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளார்

இதைத் தொடர்ந்து இருவரையும் அவர்களின் பெற்றோருடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், இரண்டு மாணவர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும் ஒரு மாணவரை மிரட்டுவதற்கு மற்றொரு மாணவர் புத்தகப் பையில் வைத்து அரிவாளை எடுத்து வந்ததும் தெரியவந்தது. மேலும் தகராறில் ஈடுபட்ட ஒரு மாணவனுக்கு மற்றொரு இளம் சிறார் உதவியாக இருந்ததாகக் தெரிகிறது. இருவரும் இணைந்து பள்ளிக்கு அரிவாள் கொண்டு வந்து, அங்குள்ள மற்றொரு மாணவனை ஏற்கெனவே மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

Arrested

இந்நிலையில், மூவரையும் இளஞ்சிரார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரையும் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த சம்பவம் திருநெல்வேலியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.