குற்றம்

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

Sinekadhara

சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் என்ற பகுதியில் 10 கோடி மதிப்பிலான நிலம் ஒன்று இருந்துள்ளது. இந்த நிலம் தொடர்பான பிரச்னையில், சென்னையிலிருந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இது சம்பந்தமாக அவருடைய மைத்துனர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர், கூலிப்படைகள், ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட 10 பேரை கைதுசெய்திருந்தனர்.

அதில் ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆன நிலையில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. தீர்ப்பு இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.