Police station pt desk
குற்றம்

மயிலாடுதுறை: ஐடிஐ மாணவனை தாக்கிய சக மாணவர்கள் - வீடியோ வைரலான நிலையில் 5 பேர் கைது

மயிலாடுதுறையில் ஐடிஐ மாணவனை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் மடவிளாகம் பகுதியில் உள்ள ஐடிஐ ஒன்றில் படிக்கும் மாணவனை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இளஞ்செழியன் என்ற மாணவருக்கும், தினேஷ் என்ற மாணவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இது குறித்து தினேஷ் தனது கூட்டாளிகளிடம் கூறியுள்ளார்.

students assault

இதையடுத்து தினேஷின் கூட்டாளிகளான ஐந்து மாணவர்கள் இளஞ்செழியனை கடுமையாக தாக்கியதோடு வாட்ஸ் அப் வீடியோ காலில் அதை தினேஷ்க்கு காட்டியுள்ளனர். இதனை வேறொரு மாணவர் வீடியோ எடுக்கவே, அது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இளஞ்செழியனை தாக்கிய 5 பேரையும் கைது செய்த மயிலாடுதுறை போலீசார், தினேஷை தேடி வருகின்றனர்.

மாணவர்கள் அனைவரும் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால், அவர்கள் நாகப்பட்டினம் சிறார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.