குற்றம்

’ஆபரேஷன் கந்துவட்டி’ - 5 பேர் அதிரடி கைது, காசோலைகள், ரொக்கம் பறிமுதல்

’ஆபரேஷன் கந்துவட்டி’ - 5 பேர் அதிரடி கைது, காசோலைகள், ரொக்கம் பறிமுதல்

Sinekadhara

கடலூரில் ஆபரேஷன் கந்துவட்டி போலீஸ் சோதனையில் கத்தை கத்தையாக வெற்று பத்திரங்கள், ரொக்கம் மற்றும் நிரப்பப்படாத காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் சிறப்பு காவல்படையில் பணியாற்றிய செல்வகுமார் என்பவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் அனிதா என்ற பெண்ணை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தமிழக டிஜிபி தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கந்துவட்டி திட்டம் மூலம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கந்துவட்டி கும்பலை கைதுசெய்ய உத்தரவிட்டார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ’ஆபரேஷன் கந்து வட்டி’யில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் பலரிடமிருந்து கத்தை கத்தையாக கடன் குறித்த எந்த தகவலும் இல்லாமல் வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் மட்டும் பெற்று வைக்கப்பட்ட பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ரொக்கம் மற்றும் நிரப்பப்படாத காசோலைகளும் பலரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பல இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் ’ஆபரேஷன் கந்துவட்டி’ ப்ளானில் அதிரடியாக காவல்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.