boat pt desk
குற்றம்

இலங்கை டூ ராமேஸ்வரம்: படகில் கடத்திவரப்பட்ட 9 கிலோ தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது

webteam

இலங்கையில் இருந்து படகுகளில் கடத்திவரப்பட்ட ரூ.5.30 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர், தங்க கடத்தலில் ஈடுபட்ட தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டிணம் மீனவர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தேவ சகாயம் டேனியல், ஸ்ரீதர், கெவின்ராஜ் ஆகியோரிடம் விடிய, விடிய விசாரணை மேற்கொன்டனர்.

boat

விசாரணையில், அவர்கள் நேற்று அதிகாலை தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு சென்றது தெரியவந்தது. அப்போது சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் வைத்து இலங்கையைச் சேர்ந்த ஒரு பைபர் படகில் இருந்த மூவரிடமிருந்து தங்கக்கட்டிகளை பெற்றுள்ளனர். அவற்றை தாங்கள் உணவு கொண்டு செல்லும் தூக்கு பாத்திரத்தில் மறைத்து கொண்டு வந்துள்ளனரென்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இரண்டு படகுகளையும் மீண்டும் சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். பின் நான்கு பேரையும் கைப்பற்றப்பட்ட 9 கிலோ தங்கத்தையும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் மதுரைக்கு கொண்டு சென்றனர். 2023 ஆம் ஆண்டில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இலங்கையில் இருந்து ரூ. 40 கோடி மதிப்பிலான 70.900 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

arrested

தொடர்ச்சியாக ராமேஸ்வரம் அருகே உள்ள கடலோரப் பகுதிகளில் இலங்கை இருந்து மீனவர்கள் சிலரின் உதவியுடன் தங்கம் கடத்திவரப்படுவது, அப்பகுதி மீனவர்கள் மத்தியில் அதிருப்தியையும், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.