மும்பையைச் சேர்ந்த சிறுமி புதுச்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்து தனியாக புதுச்சேரியை சுற்றி பார்ப்பதாக கூறி விட்டு கடந்த 30ஆம் தேதி புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பாததால் உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
சிறுமியை தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளில் சிறுமி ஆட்டோ ஒன்றில் ஏறிச் செல்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சம்பந்தபட்ட ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சிறுமியை ஆட்டோ ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்து அவரை தந்திராயன் குப்பம் கடற்கரை விடுதி ஒன்றில் இறக்கி விட்டு அங்கிருந்த இளைஞர்களிடம் விட்டுச் சென்றதாக தெரிவித்தார்.
இதனையடுத்த தீவிர தேடுதலில் சிறுமி கடந்த 2ஆம் தேதி புதுச்சேரி கடற்கரையில் மீட்கபட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் 3 இளைஞர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்ததையடுத்து 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.